பயங்கரவாதக் கூடாரமாக ஆப்கனை மாற்றிவிடக் கூடாது : இந்தியாவும் அமெரிக்காவும் தாலிபான்களுக்கு கூட்டாக எச்சரிக்கை

0 2343

பிற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தாலிபான்களை கூட்டாக  இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதன் முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாக இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா தலைமையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பெண்கள், சிறார்கள், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை தாலிபான்கள் மதிப்பதோடு, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் உள்நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர்களை தடுக்கக் கூடாது என கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments