வெளிநாட்டு பயணம் செல்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில், தடுப்பூசி சான்றிதழில் பிறந்த தேதியை குறிப்பிட மத்திய அரசு முடிவு

0 1722

வெளிநாட்டு பயணம் செய்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதியை குறிப்பிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் அடிப்படையில், சர்வதேச பயணிகளுக்கான தடுப்பூசி சான்றிதழில் பிறந்த தேதி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற பிரிட்டனின் வலியுறுத்தலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 10 நாட்கள் குவாரண்டைனில் செல்ல வேண்டும் என பிரிட்டன் கூறி வருகிறது.

பிரிட்டனுக்கு விமானம் ஏறுவதற்கு 3 நாட்கள் முன்னரும்,  அங்கு சென்று இரண்டு நாட்கள் கழித்தும் கொரோனா சோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சான்றிதழை திருத்தி பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் மட்டுமே இதை தவிர்க்க முடியும் என்பதும் பிரிட்டனின் நிலைப்பாடாக உள்ளது.

அரசின் இந்த முடிவை அடுத்து, வெளிநாட்டு பயணம் செய்பவர்கள், கோவின் தளத்தில் சென்று, தங்களது பிறந்த தேதியையும் சேர்த்த பின்னர் புதிய சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments