பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

0 1935

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்கள் சீரமைப்பு மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

காந்தி மண்டபம் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாருதல், மத்திய கைலாஷ் முதல் இந்திரா நகர் மற்றும் திருவான்மியூர் வரை நடைபெறும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாருதல், சிறு கால்வாய்கள் அமைத்தல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

வேளச்சேரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சிறு வடிகால் அமைக்கும் பணியையும், வேளச்சேரி ஏரியில் படர்ந்திருக்கும் ஆகாயதாமரை அகற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், எக்ஸ்கவேட்டர் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments