ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையாக ஸ்டார்மிங் ஆப்பரேஷன் ; தமிழகம் முழுவதும் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

0 3295
ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையாக ஸ்டார்மிங் ஆப்பரேஷன் ; தமிழகம் முழுவதும் 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது

ஸ்டார்மிங் ஆப்பரேஷன் மூலம், தமிழகம் முழுவதும் 36 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 500 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை ஒடுக்க, ஸ்ட்ராமிங் ஆப்ரேஷன் என்ற நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பழைய குற்றவாளிகளின் வீடுகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர். 16 ஆயிரத்து 370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 2,512 கைது செய்யப்பட்டுள்ளனர். 5 துப்பாக்கிகள், 934 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரத்து 927 பழைய குற்றவாளிகளிடம், நன்னடத்தை பத்திரம் மூலம் எழுதி வாங்கிக் கொண்ட போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். குற்றச் செயல்களை தடுக்க ஸ்டார்மிங் ஆப்பரேசன் தொடரும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments