நீட் தொடர்பான ஏ.கே.ராஜன் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன - அண்ணாமலை

0 3131

ஏ.கே.ராஜன் அறிக்கை நீட் சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்தை வலுப்படுத்துவதாகத் தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் கட்சி அலுவலகத்தில் ஜனசங்க நிறுவனர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாய் உருவப் படத்துக்கு அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்னும் பிரச்சார இணையத்தளத்தையும் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments