கனடா சிறையில் இருந்து ஹுவாவேய் முக்கிய பெண் அதிகாரி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன சிறையில் இருந்த கனடா நாட்டவர் 2 பேரை விடுவித்தது சீனா

0 1858

கனடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீன ஹுவாவேய் நிறுவன தலைமை நிதி அதிகாரி மெங் வான்சு (Meng Wanzhou) விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனடா நாட்டவர் 2 பேரை சீனா விடுவித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்ததாக கூறப்படும் நிதி மோசடி வழக்கு தொடர்பாக, அந்நாட்டின் நாடு கடத்தும் கோரிக்கையை ஏற்று, கடந்த 2018 ல் வான்குவர் விமான நிலையத்தில் வைத்து மெங் வான்சுவை கனடா அரசு கைது செய்தது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, உளவு பார்த்தார்கள் என்று கூறி கனடா நாட்டவர் 2 பேரை கைது செய்து சீனா சிறையில் அடைத்தது.

இந்த நிலையில் அமெரிக்க, சீனா அதிபர்கள் எடுத்த முடிவின் படி, மெங் வான்சு மீதான குற்ற நடவடிக்கைகளில் அவர் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கனடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சீனாவும் சிறையில் இருந்த கனடா நாட்டவர் 2 பேரை விடுவித்து அவர்கள் தாயகம் திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments