தமிழ்நாட்டில் நாளையும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 15 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் போட இலக்கு

0 2152

தமிழ்நாட்டில் நாளை நடைபெற மாபெரும் தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், திங்கட்கிழமை தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை மருத்துவப் பணிகள் இயக்ககத்தில் 108 அவசரக்கால ஊர்தி மேலாண்மை சேவை ஆண்டு விழாவையொட்டிக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பணியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாம் வாரமாக நாளையும் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments