வரி ஏய்த்த நிதி நிறுவனங்கள்..! கணக்கில் காட்டாத ரூ. 300 கோடி..! கண்டுபிடித்த வருமான வரித்துறை..!

0 4852
வரி ஏய்த்த நிதி நிறுவனங்கள்..! கணக்கில் காட்டாத ரூ. 300 கோடி..! கண்டுபிடித்த வருமான வரித்துறை..!

சென்னையில் இரண்டு தனியார் நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், வட்டி மூலம் பெற்ற முந்நூறு கோடி ரூபாய் வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

புரசைவாக்கம், சவுகார்பேட்டை உட்பட 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அந்த நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டிக்கு கொடுக்கப்பட்ட வரையறையைத் பணத்தின் மூலம் சுமார் முந்நூறு கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருமானம் ஈட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைத் தவிர வெவ்வேறு பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி அதில் வாடிக்கையாளர்களை வட்டி செலுத்த வைத்து வருமானத்தை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத சுமார் 9 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments