இம்ரான் கான் பேச்சுக்கு ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம் ; ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

0 2372
இம்ரான் கான் பேச்சுக்கு ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம்

ஐ.நா. பொதுச்சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, தீ வைக்கும் மனோபாவமுள்ள பாகிஸ்தான் ஒரு தீயணைப்பு வீரரை போல மாறுவேடமிட்டு பேசுவதாக குற்றஞ்சாட்டி உள்ளது.

ஐ.நா. பொதுச்சபையில் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒளிபரப்பப்பட்டது. அதில், கடந்த 2019ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட்டு விட்டதாக இந்தியா தாமாகவே முடிவு செய்து விட்டதாக விமர்சித்தார்.

அவரது இந்த விஷமத்தனமான பேச்சுக்கு ஐ.நா. வின் இந்திய பிரதிநிதி சினேகா துபே தமது பதிலுரையில் பாகிஸ்தானை ஒரு கபட வேடதாரி என சாடினார். முழுமையான ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியன இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கவே முடியாத பகுதிகள் என கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments