புதுச்சேரியில் மதுபோதையில் போக்குவரத்து காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநர் கைது

0 1931
புதுச்சேரியில் மதுபோதையில் போக்குவரத்து காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநர் கைது

புதுச்சேரியில், மதுபோதையில் சரக்கு வாகனத்தை தாறுமாறாக ஓட்டியதோடு, வழிமறித்த போக்குவரத்து காவலரை சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கிரும்பாக்கம் பகுதியில் தாறுமாறாக ஓடிய டாட்டா ஏஸ் வாகனத்தை போக்குவரத்து காவலர் சுபாஷ் தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனையடுத்து தனது பைக்கில் அந்த சரக்கு வாகனத்தை அரை கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று வழிமறித்து நிறுத்தினார்.

இந்நிலையில், மதுபோதையில் இருந்த சரக்கு வாகன ஓட்டுநர், சுபாஷை சட்டையை பிடித்து இழுத்து அடிக்க முயன்றதோடு, அவர் அணிந்திருந்த முகக்கவசத்தை பறித்து வீசினார். போக்குவரத்து காவலர் சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டுநர் நாகராஜை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments