ஆன்லைன் விளையாட்டு விபரீதம்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!

0 4632

ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் விளையாட்டிற்கு குழந்தைகள் அடிமையாகமல் இருக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்படுமாறு பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டிற்கு குழந்தைகள் அடிமையாகமல் தடுக்க மாணவர்கள் எந்த ஆப்-களை பயன்படுத்துகின்றனர், எந்த ஆப்-ல் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும், ஆப், இணையதளம் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்யவிடக்கூடாது. ஆப்-களை விலைக்கு வாங்கவும், பெற்றோர்கள் தங்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள், ஓடிபி-க்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செல்போன், கணினி உள்ளிட்டவற்றில் ஆண்டிவைரஸ், ஸ்பைவேர் மென்பொருள்களை install செய்துகொள்ள வேண்டும், மாணவர்கள் adult app பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணித்து அதை தடுக்க உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் கண்டறியப்பட்டால், உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இணையதளத்திலோ, அப்ளிகேஷனிலோ ஏதேனும் விபரீதமாக நிகழ்ந்துவிட்டால் உடனடியாக அதனை ஸ்க்ரீன்ஷாட் செய்து ரிப்போர்ட் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளின் விபரீதம் குறித்து பெற்றோர், ஆசிரியர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments