தமிழகத்தில் 22 லட்சம் பேர் 2 ஆம் டோஸ் போட்டுக் கொள்ளவில்லை: ஒரு மாதத்திற்குள் 2 ஆம் டோஸ் போட்டுக் கொள்ளவேண்டும் - ராதாகிருஷ்ணன்

0 2106

தமிழ்நாட்டில் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் சுமார் 22 லட்சம் பேரும், தாமாக முன்வந்து ஒரு மாதத்திற்குள் அதை செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 வயதிற்கு மேற்பட்டோரில்  56% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், 2ம் தவணையை பொறுத்தவரை 17% மட்டுமே செலுத்தி கொண்டுள்ளதாகவும் கூறினார்.

முதியோர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் ஆயிரத்து 500 ஆக இருந்த கொரோனா தொற்று ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக கூறிய அவர்,பல்வேறு தளர்வுகள் இருந்தாலும், கொரோனா சூழ்நிலையை புரிந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments