மலைப்பாதையில் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

0 5783
மலைப்பாதையில் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

நீலகிரி மாவட்டத்தில், மலைப்பாதையில் திடீரென அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை, பேருந்தின் கண்ணாடியை உடைத்த வீடியோ வெளியாகியுள்ளது. கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து, மேல்தட்டபள்ளம் என்ற இடத்தில் சென்றபோது பேருந்தை காட்டு யானை வழிமறித்தது.

அப்போது ஓட்டுநர் பேருந்தை பின்நோக்கி இயக்கியதால், துரத்தி வந்த யானை ஆக்ரோஷமாக பேருந்து கண்ணாடியை உடைத்தது. பிறகு யானை பேருந்தை நோக்கி முன்னேறி வந்த திக் திக் நிமிடங்களில் ஓட்டுனர் சலனம் எதையும் வெளிப்படுத்தாமல் சாமர்த்தியமாக செயல்பட்டார்.

இதனை பேருந்தில் இருந்த பயணி வீடியோ பதிவு செய்த நிலையில், ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தியதால், சிறிது நேரத்திற்கு பின் யானை அங்கிருந்து சென்றுவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments