நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு..பாதுகாப்பை பலப்படுத்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் என்.வி.ரமணா ஆலோசனை

0 1737

டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என் பட்டேலுடன் தொடர்பு கொண்டு அவர் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தடயவியல் நிபுணர்கள் நீதிமன்றத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரவுடி ஒருவனை வழக்கறிஞர் உடையில் வந்த எதிர்கோஷ்டியினர் 2 பேர் நீதிபதி முன்னிலையில் சுட்டுக் கொன்றனர்.

அவர்கள் இருவரும் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments