ஐநா.பொதுச்சபை நிகழ்வில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்...ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

0 1779

நியுயார்க் நகரில் நடைபெறும் ஐநா.பொதுச்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே  இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்தார்.

ஆக்ரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளை சட்டவிரோதமாக பாகிஸ்தான்  கைப்பற்றியதாக குறிப்பிட்ட அவர், உடனடியாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் நிதியுதவி அளிப்பதும் பாகிஸ்தானின் அரசுக் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ளுமாறும் சினேகா தூபே தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments