ஸ்டார்மிங் ஆபேரஷன் நடந்த மறுநாளில், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் ரவுடி வெட்டிக் கொலை

0 1677

சென்னையில் ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற பெயரில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடந்த மறுநாளில், ரவுடி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

எம்.ஜி.ஆர். நகரில் தன் வீட்டின் முன் நின்று கொண்டு இருந்த ரவுடி காளியை, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் காளியின் உடலை கைப்பற்றினர்.

அதே பகுதியில் வசித்து வருபவர் தீபக் என்பவருடன் அவருக்கு முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments