வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

0 1030

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 3 பேரை இலங்கை மீனவர்கள் அரிவாளால் வெட்டியதால் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அவருடைய மகன்கள் சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் நேற்று இரவு 10 மணியளவில் வலைவிரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர் அப்போது  மூன்று படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் படகை சூழ்ந்து கொண்டு மீனவர் சிவக்குமாரை அரிவாளால் வெட்டியதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார்.

மற்ற இரண்டு மீனவர்களையும் கம்பு கட்டை போன்றவற்றால் தாக்கி ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள வலைகள் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர் காயமடைந்த மீனவர்கள் அதிகாலையில் கரை திரும்பினர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments