தருமபுரியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த போலி போலீஸ் கைது

0 8737
தருமபுரியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த போலி போலீஸ் கைது

தருமபுரி அருகே இரு சக்கர வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலிக் காவலர் கைது செய்யப்பட்டார். அரூர் மருதிப்பட்டியைச் சேர்ந்த தம்பிதுரை என்பவர், தான் குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருவதாகக் கூறி, தங்கும் விடுதி, உணவகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

நேற்று மாலை அரூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலரை வழிமறித்து மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த காவலர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தம்பிதுரை கைது செய்யப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments