ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் சொன்னதை செய்து இருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1761

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் சொன்னதை செய்து இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 51 வாக்குறுதிகள், பட்ஜெட் மற்றும் வேளாண் நிதி அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட 66 வாக்குறுதிகள் உள்பட 202 வாக்குறுதிகள் அரசு அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments