இந்தியாவிலும் 5 பைடன்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன ; ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி நகைச்சுவை பேச்சு

0 1639
இந்தியாவில் 5 பைடன்கள் உள்ளதாக பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் நகைச்சுவை பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்த போது, இந்தியாவில் 5 பைடன்கள் இருப்பதாக ஜோ பைடன் கூற, அதற்கான ஆவணங்களை தாம் கொண்டு வந்திருப்பதாக பிரதமர் மோடியும் கூற இரு தலைவர்களும் மனம்விட்டு சிரித்தனர்.

மும்பையில் இருந்து பைடன் என்பவரிடமிருந்து தமக்கு கடிதம் வந்திருப்பதாகவும், இந்தியாவில் 5 பைடன்கள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருப்பதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

தமது கொள்ளுத் தாத்தா ஜார்ஜ் பைடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் பணிபுரிந்து இந்தியப் பெண்ணை மணந்ததாகவும் அதனால் இந்தியாவில் தமக்கு தூரத்து உறவினர்கள் இருக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments