வெள்ளை மாளிகை முன் பரதநாட்டிய நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பளித்த இந்திய வம்சாவளியினர்

0 1822
அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது பேசிய பைடன், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு, உலக சவால்களை தீர்ப்பதற்கு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க துணை அதிபராக இருந்த போதே, 2020ஆம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கும் என்று தாம் பேசியிருந்ததை பைடன் சுட்டிக்காட்டினார். இந்த நூற்றாண்டின் 3-வது தசாப்தத்தின் தொடக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த தசாப்தம் எவ்வாறு உருவாகப் போகிறது என்பதில் பைடனின் தலைமை நிச்சயமாக ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்றார்.

தொழில்நுட்பம் ஒரு உந்து சக்தியாக மாறி வருகிறது என்றும், உலகளாவிய நன்மைக்கு தொழில்நுட்பத்தை உபயோகிக்க நமது திறமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக துறையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தேவை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகை முன் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு, பரதநாட்டிய நடனமாடி வரவேற்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments