தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் ; வானிலை ஆய்வு மையம்

0 3582
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் ; வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments