மாஸ் ஹீரோவுக்கு இணையாக கீர்த்திக்கு கூடிய ரசிகர் கூட்டம் ..! கொரோனா போயே போச்சு.!

0 2032

தெலங்கானாவில் கொரோனா இல்லை என்று அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற நகைக்கடை திறப்பு விழாவில் மாஸ் ஹீரோக்களுக்கு கூடும் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது..

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வரும் கேரளத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்திசுரேஷ் புதிய நகைகடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள தெலங்கானா சென்றார். விழாவுக்கு சென்ற அவரது கார் கூட்ட நெரிசலில் மிதந்தபடி வந்தது...

வழக்கமாக தெலுங்கு படங்களில் கார்களை பறக்க விடும் மாஸ் ஹீரோக்களுக்கு மட்டுமே கட்டுக்கடங்கா கூட்டம் சேரும் அதே அளவு கூட்டம் அங்கு திரண்டிருந்தது. நகைக்கடையை திறக்க வரும் கீர்த்தி சுரேஷை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொளுத்தும் வெயிலில் வியர்த்து விறுவிறுக்க நெருக்கியடித்துக் கொண்டு காத்துக்கிடந்தனர். தன்னை கண்டதும் உற்சாக குரல் எழுப்பியவர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார் கீர்த்திசுரேஷ்....

கட்டுக்கடங்கா கூட்டத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வலம் வந்த கீர்த்தி சுரேஷுடன் போட்டோ எடுத்துக்கொள்ள போலீசார் கூட போட்டி போட்டனர். முன்பு கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி கிடந்தவர்கள் கொரொனாவை மட்டுமல்ல, முகக்கவசத்தையும், சமூக இடைவெளியையும் மறந்து உற்சாக குரல் எழுப்பினர்.

விழா முடிந்ததும் தேர்தல் பிரசாரத்தில் வாக்கு கேட்டு செல்லும் அரசியல்வாதிகள் போல காரின் திறந்த கூறை வழியாக கை அசைத்தவாறே புறப்பட்டார். கூட்டத்துக்குள் சிக்கி தினறி கார் சென்றது. கீர்த்தி சுரேஷின் வருகையால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொரோனா 3ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் தெலங்கானாவில் கொரோனா பரவல் இல்லை என்றும், கொரோனாவுக்கு என்று எந்தவித தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகளும் கிடையாது என்று மாநில அரசு அறிவித்ததன் தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற இந்த திறப்பு விழாவில் பிரமாண்ட கூட்டம் திரண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments