பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ஜோ பைடன் கருத்து.. இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த விருப்பம்

0 2267

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமெரிக்க சுற்றப் பயணத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி, வெள்ளை மாளிகை சென்றார். முன்னதாக அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பாரம்பரிய பரதநாட்டிய நடனமும் அப்போது அரங்கேறியது.

வெள்ளைமாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, முதல் முறையாக பிரதமர் மோடி சந்தித்தார். ஓவல் அலுவலகத்தில் இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான முறையில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார்.

கொரோனா பாதிப்பு முதல் காலநிலை மாற்றம் வரை பல்வேறு பிரச்சனைகளை இணைந்து எதிர்கொள்வது குறித்து மோடியுடன் விவாதிப்பதை எதிர்நோக்கி இருப்பதாக ஜோபைடன் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments