தனியார் நிறுவன ஊழியர் கழுத்தறுத்துக் கொலை.? மனநிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துகொண்ட சக ஊழியர்

0 2395

கும்பகோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கழுத்தறுத்து கொல்லப்பட்டு ஆற்றில் உடல் வீசப்பட்ட நிலையில், மனநிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ள அவரது சக ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற அந்த நபர், தங்களது நிறுவனம் சார்பில் கும்பகோணத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தார்.

விடுதி ஒன்றில் தங்கி இருந்தவர், நேற்றிரவு பார் ஒன்றில் சக ஊழியர்களோடு மது அருந்தியுள்ளார். அப்போது ஊழியர்களில் ஒருவரான ஆடுதுறையைச் சேர்ந்த அன்பு என்பவர், வெங்கடேசனை தனியாக மது அருந்த அழைத்துச் சென்றார் என்று கூறப்படுகிறது.

காலை வரை இருவரும்  விடுதி திரும்பாத நிலையில், மணஞ்சேரி காவிரியாற்றில் கழுத்தறுபட்ட நிலையில், வெங்கடேசனின் சடலம் மிதந்துள்ளது.

அன்புவைத் தேடியபோது, மனநிலை சரியில்லை எனக் கூறி, தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவராகவே சேர்ந்துகொண்டது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments