ஏழுமலையான் கோவிலில் 2 மணி நேரத்தில் 2.40 லட்சம் டிக்கெட் விற்பனை... டிக்கெட் வாங்க 1 கோடி பேர் முயற்சி..!

0 3508

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் கட்டணத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு அக்டோபர் மாதத்திற்கான 2 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க ஒரு கோடி பேர் முயற்சித்த நிலையில் 2 மணி நேரத்தில் அனைத்தும் விற்கப்பட்டதாக தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்தார்.

முதன்முறையாக தேவஸ்தான இணையதளத்தில் கிளவுட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறினார். இருப்பினும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இணையதளத்தை பயன்படுத்தியதன் காரணமாக காலை 9 மணி முதல் பத்தரை மணி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், பின்னர் அதனை சீரமைத்ததாகவும் தெரிவித்தார்.

அக்டோபர் 1ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டை பெறுவதற்கு ஒரே நேரத்தில் 5 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் வரை முயற்சித்ததாகவும் தர்மாரெட்டி கூறினார். சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு நாளைக்கு 8000 வீதம் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments