எல்லையை பாகிஸ்தான் மூடியதால் ஆப்கான் மக்கள் தவிப்பு.!

0 1944

ஆப்கானிஸ்துடன் பகிர்ந்து கொள்ளும் எல்லையை பாகிஸ்தான் முழுவதுமாக மூடியதால், ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான மக்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்து வந்தனர். இந்த நிலையில் காந்தகாரின் ஸ்பின்போல்டக் பகுதியையும் பாகிஸ்தானின் சமன் பகுதியையும் இணைக்கும் எல்லையை, இம்ரான்கான் அரசு மூடியுள்ளது.

எல்லை அருகே காத்திருக்கும் ஆப்கான் மக்கள், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் அன்பிற்குரியவர்களுடன் ஒன்றிணைவதற்கு பாகிஸ்தானுக்குள் சென்றே ஆக வேண்டும் என்று மன்றாடியும், பாதுகாப்பு பிரச்சனையை காரணம் காட்டி அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.

தலிபான்களும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் ஆதரவளித்ததாகக் கூறப்பட்டாலும், அண்மையில் எல்லையில் உருவாகும் மனிதாபிமான நெருக்கடி இருதரப்புக்கும் இடையே ஆழமான பிளவுகளை உருவாக்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments