டாரஸ் லாரிக்குள் சிக்கிய மூவரை காப்பாற்றிய டிரைவர்..! இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சி

0 4520
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாரஸ் லாரியை முந்திச்செல்ல முயன்று இரு சக்கரவாகனம் சாலையில் சருக்கியதால் லாரிக்குள் விழுந்த மூவர் சில அடிதூரம் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாரஸ் லாரியை முந்திச்செல்ல முயன்று இரு சக்கரவாகனம் சாலையில் சருக்கியதால் லாரிக்குள் விழுந்த மூவர் சில அடிதூரம் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய  சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் பெரியார் நகரை சேர்ந்த டேனியல் ரூபன் என்பவர், இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை ஏற்றிக்கொண்டு பாகலூர் - ஒசூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

முன்னாள் சென்ற டாரஸ் லாரி ஒன்றை வேகமாக முந்திச்சென்ற போது சாலையின் விளிம்பில் சறுக்கிய அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. இருந்தாலும் காலை ஊன்றி நிற்க முயன்ற அவரால் வாகனத்தில் மூன்று பேர் இருந்ததால் வாகனத்தை கட்டுபடுத்த இயலாமல் டாரஸ் லாரியின் முன் சக்கரத்துக்குள் மூன்று பேரும் கொத்தாக விழுந்தனர்.

இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த டேனியல் ரூபனின் தடுமாற்றத்தை சரியாக கவனித்த, டாரஸ் லாரி ஓட்டுனர் சுதாரித்துக் கொண்டு சடன் பிரேக் போட்டு லாரியை நிறுத்த லாரிக்குள் சிக்கிய மூவரும் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். முன் சக்கரம் சுழலாததால் 3 பேர் மீதும் முன் சக்கரம் ஏறாமல் உயிர்பிழைத்ததாக கூறப்படுகின்றது.

லாரிக்கு அடியில் இருந்து சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். லாரியில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டதில் காயம் ஏற்பட்டுஇருந்தாலும், அவர்களது உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றியது ஓட்டுனர் என்பதை சிசிடிவி காட்சியை பார்த்து தெரிந்து கொண்டவர்கள் அவரை பாராட்டினர்.

இருவர் செல்வதற்கான இரு சக்கரவாகனத்தில் விதியை மீறி மூவர் பயணித்ததோடில்லாமல் தலைகவசம் அணியாமல் சென்ற ரூபான் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதும், கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் சென்றதால் இந்த விபத்து நிகழ காரணமாகிவிட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments