வாகனங்கள் பல எரிபொருளால் இயங்கும் எஞ்சினைக் கொண்டிருப்பது கட்டாயம் -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

0 2521

வாகனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருட்களால் இயங்கும் எஞ்சின் கொண்டிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அடுத்த நான்கு மாதத்துக்குள் முதலில் BMW நிறுவனத்துக்கும் பின்னர் மற்ற வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய இறக்குமதியைக் குறைக்கவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் மின்சார வாகனங்கள் தயாரிப்பை அரசு ஊக்குவிக்கிறது. இப்போது பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்குள் 20 விழுக்காடு எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் நூறு ரூபாய்க்கும், எத்தனால் 63 ரூபாய்க்கும் விற்கும் நிலையில் எத்தனாலை எரிபொருளாகக் கொண்ட எஞ்சின் இருந்தால் எரிபொருள் செலவு குறையும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments