10 சதவீத இடஒதுக்கீடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவு

0 5180

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை, உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அமல்படுத்த கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் தனது வரம்பை மீறி இருப்பதாக தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்ற ஒப்புதலுடன்தான் செயல்படுத்த வேண்டுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments