தமிழ்நாட்டில் இனி யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

0 1680

தமிழ்நாட்டில் இனி யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், கோவில், வளர்ப்பு மற்றும் வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல்நிலை குறித்த அறிக்கையை வீடியோ பதிவுடன் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யானைகளின் எண்ணிக்கையை தெரிவித்த அரசு, வீடியோ பதிவுடன் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க கோரியது. அரசின் கோரிக்கையை ஏற்று, விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், கடந்த 5 ஆண்டுகளின் யானைகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments