தறிகெட்டு ஓடிய சொகுசு கார் 5 வாகனங்கள் மீது மோதி விபத்து: குடிபோதையில் நேர்ந்த விபரீதம்.!

0 6591

குடிபோதையில் தறிகெட்டு ஓடிய கார் 5 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்திய அண்ணாநகரை சேர்ந்த, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

எழும்பூர் எத்திராஜ் பகுதியை சேர்ந்த வில்சன் என்பவர், தனது 2 மகள்கள் மற்றும் மகளின் தோழியுடன் நானோ காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, காசா மேஜர் சாலையில் அதிவேகமாக எதிரே வந்த Benz கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ, பைக் மற்றும் நானோ கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதில் நானோ காரில் பயணித்த தந்தை மற்றும் இரண்டு மகள்கள்,ஆட்டோ ஓட்டுநர்,மற்றும் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய அண்ணாநகரை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரித்ததில், நேற்றிரவு நண்பர்களுடன் மது பார்ட்டியில் கலந்துகொண்டு, பின்னர் குடிபோதையில் அவர் காரை இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடைய, விபத்துக்குள்ளான நானோ காரில் இருந்து யானை தந்தம், மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டு,  வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments