மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் இருந்து 22 சவரன் நகைகளை பறித்த போலி பெண் சாமியார் கைது

0 2851

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாங்கல்ய தோஷம் கழிப்பதாக கூறி, பெண் ஒருவரிடம் இருந்து 22 சவரன் நகைகளை பறித்துக் கொண்ட போலி பெண் சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலை சேர்ந்த கிரிஜாவுக்கு, கோவிலில் வைத்து சுஜிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தாம் ஒரு சாமியார் என அறிமுகப்படுத்திக் கொண்ட சுஜிதா, கிரிஜாவின் 2 மகள்களுக்கும் மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், திருமணமாவதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய கிரிஜாவும், பயந்துபோய் தோஷத்தை கழிக்க ஐடியா கேட்கவே, சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட சுஜிதா, பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி சிறுக, சிறுக நகைகளை பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை வெளியில் சொன்னால் பூஜை பழிக்காமல் போய்விடும் என கிரிஜா மிரட்டிய நிலையில், சுஜிதாவும் மௌனம் காத்திருக்கிறார். திடீரென வீட்டில் நகை இல்லாததை அறிந்து சுஜிதாவின் கணவர் கேட்ட போது உண்மை தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments