வேலை செய்துக்கொண்டே படித்தால் என்ன தவறு..? தெலங்கானாவில் சிறுவன் ஒருவன் கேட்கும் வீடியோ வைரல்

0 2054
வேலை செய்துக்கொண்டே படித்தால் என்ன தவறு என்று கேள்வி கேட்ட 6ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனை தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் பாராட்டியுள்ளார்.

வேலை செய்துக்கொண்டே படித்தால் என்ன தவறு என்று கேள்வி கேட்ட 6ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவனை தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் பாராட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், வீட்டின் பொருளாதார நிலைமையை உணர்ந்து காலையில், வீடு, வீடாக சைக்கிளில் சென்று, நியூஸ் பேப்பர் போட்டு வருகிறான்.

இந்நிலையில், ஒருவர், அந்த மாணவனிடம் சென்று, தனது செல்போனில் வீடியோ எடுத்தப்படி, படிக்கும் வயதில் ஏன் பேப்பர் போடுகிறாய்? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, ஏன் பேப்பர் போட்டால் என்ன தவறு என ஜெயப்பிரகாஷ் கேட்டான். அதன் பின்னர், படிக்கும் வயதில் வேலை செய்தால் கல்வி பாதிக்கப்படும் அல்லவா என மீண்டும் கேள்வி கேட்கப்படுகிறது. வேலை பார்த்துக்கொண்டே படித்தால் என்ன தவறு என்று மாணவன் ஜெயபிரகாஷ் பதிலளித்தான்.

இந்த வயதில் கஷ்டப்பட்டால் பெரியவன் ஆன பின்பு, எந்த வேலையையும் சுலபமாக செய்து விடலாம் அல்லவா என ஜெயப்பிரகாஷ் அந்த நபரிடத்தில் கூறினான்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் பார்த்து பின் நேற்று, அவருடைய டிவிட்டரில் அந்த மாணவனின் வீடியோவை பதிவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதில், ஜகத்தியாலா நகரை சேர்ந்த மாணவர் ஜெயப்பிரகாஷின் மன தைரியத்தை பார்த்து ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்ததாகவும் இந்த சிறு வயதில் மன முதிர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வேலை பார்த்துக்கொண்டே படிப்பதில் என்ன தவறு என நெற்றி பொட்டில் ஆணி அடித்தது போல் கேட்கிறார். வருங்காலத்தில் ஜெயப்பிரகாஷ் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்வான் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments