டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

0 3009
டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேடத்தில் வந்து பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்ட 2 பேரை போலீசார் எதிர்தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர்.

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேடத்தில் வந்து பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்ட 2 பேரை போலீசார் எதிர்தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர்.

கொலை உள்பட பல்வேறு வழங்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டு குற்றவாளியான ஜிதேந்தர் கோகி என்பவனை நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.

பல்வேறு வழக்கு விசாரணைகளுக்காக ஏராளமானோர் நீதிமன்றத்தில் திரண்டிருந்த வேளையில், வழக்கறிஞர் போன்று உடையணிந்து வந்திருந்த 2 பேர், ஜிதேந்தரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக எதிர் தாக்குதல் நடத்தி, அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டனர். நீதிமன்றத்திற்குள் நடந்த இந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.

இந்த மோதலில் ரவுடி ஜிதேந்திர கோகி இறந்ததுடன், அவனைக் கொன்ற இருவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜிதேந்தருக்கு எதிர்கோஷ்டியான தில்லு கேங்கை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. டெல்லி ரோகிணி நீதிமன்றத்திற்குள்ளே நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பாதுகாப்பு குறைபாட்டை படம்பிடித்து காட்டுவதாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments