திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கவில்லை எனக் கூறி பக்தர்கள் சாலை மறியல்

0 1780
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கவில்லை எனக் கூறி பக்தர்கள் சாலை மறியல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கவில்லை என புகார் கூறி, பேருந்துகளை மறித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏழுமலையானை தரிசிக்க, கடந்த திங்கட்கிழமை முதல் தினந்தோறும் 8 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கூட்டம் சேருவதைத் தவிர்க்க, நாளை முதல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

அதேபோல் நாளைய தினத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளும், ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், இதனை அறியாத பக்தர்கள், டிக்கெட்டுகளை பெற அதிக அளவில் குவிந்தனர். ஆனால் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டதை தேவஸ்தானம் சுட்டிக்காட்டியது.

இருப்பினும் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments