இன்றைய ஐ.பி.எல். போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.... முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு ?

0 3170

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகேந்திர சிங் தோனி  தலைமையிலான சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3 இடத்திலும் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு செல்ல சென்னை அணி முனைப்பு காட்டி வரும் நிலையில், முந்தைய போட்டியில் சென்னை அணியுடன் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments