முதன்முறையாக 60,000 என்னும் வரம்பைத் தொட்ட மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்

0 3862

மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றமடைந்ததால் சென்செக்ஸ் முதன்முறையாக அறுபதாயிரம் என்னும் வரம்பைத் தாண்டியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த சில வாரங்களாக வணிகம் ஏற்றங் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து அறுபதாயிரத்து 260ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 106 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 929 ஆக இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுனங்களின் பங்கு விலை 5 விழுக்காடு வரை உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments