பட்டப்பகலில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி பணம் திருட்டு... சிசிடிவியில் சிக்கிய சம்பவம்

0 6161

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பட்டபகலில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் முதியவரை திசை திருப்பி, ஒரு லட்சம் ரூபாய திருடிச் சென்ற சம்பவத்தின் சிசிடிவி வெளியாகியுள்ளது.

ரகுபதி என்ற அந்த முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 3 பேர், இரண்டு பைக்குகளில், முதியவரை பின் தொடர்ந்து வந்தனர். ஒரு பைக்கில் வந்தவன், முதியவருக்கு அருகே சில ரூபாய் நோட்டுகளை வீசிவிட்டு, உங்களுடையை பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறியுள்ளான்.

முதியவரும் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த ரூபாய் நோட்டுக்களை சேகரித்துக் கொண்டிருக்க, மற்றொரு பைக்கில் வந்த இருவரில் ஒருவன், சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த பணப்பையை திருடிக் கொண்டு சென்றுவிட்டான்.

பின்னர், சைக்கிள் எடுக்க வந்த முதியவர் பணப்பை காணாமல் போனதை கண்டு போலீசில் புகாரளிக்கவே, சிசிடிவி காட்சிகளை வைத்து 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments