பழனி அருகே அரசு பேருந்து - லாரி மோதல்... 3பேர் உயிரிழப்பு, 14பேர் படுகாயம்

0 2653

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசு பேருந்து மற்றும் லாரி மோதிக் கொண்ட விபத்தில் 3பேர் உயிரிழந்தனர்.

பழனி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றது.  தாளையம் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது, கோவையில் செங்கல் லோடு இறக்கி விட்டு திரும்பி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூக்க கலக்கத்தில் ஓட்டுனர் லாரியை இயக்கியதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments