மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவு அரிசியில் பிளாஸ்டிக் அரிசி ; பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு

0 2844
மாணவர்களுக்கு வழங்கிய சத்துணவு அரிசியில் பிளாஸ்டிக் அரிசி ; பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு

ஒசூர் அருகே அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவு அரிசி பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாகவும், இதனை சாப்பிட்ட மாணவர்கள் வயிற்றுவலியால் அவதிப்பட்டதாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

ஜெ.காருப்பள்ளி கிராம நடுநிலைப் பள்ளி நிர்வாகம் சார்பில் 2 நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை வீட்டிற்கு எடுத்து சென்ற மாணவர்கள் பெற்றோரிடம் வழங்கி சமைத்துள்ளனர்.

அப்போது அரிசி பிளாஸ்டிக் போல தண்ணீரில் மிதந்தது மட்டுமின்றி சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments