அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி விபத்து ; 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

0 1608
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி விபத்து ; 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் குடிபோதையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி 3பேர் படுகாயம் அடைந்தனர். எழும்பூரைச் சேர்ந்த வில்சன் என்பவர் தனது 2மகள்கள் மற்றும் மகளின் தோழியுடன் நேற்றிரவு நானோ காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது காசா மேஜர் சாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ, 2 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு நானோ மற்றும் பென்ஸ் கார் மீது மோதியது. இதில் நானோ காரில் பயணித்த தந்தை மற்றும் 2 மகள்கள்ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments