16வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை ; பெற்றோரிடம் ஆசிரியர் புகார் கூறியதால் மாணவி விபரீத முடிவு

0 1397
16வது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை ; பெற்றோரிடம் ஆசிரியர் புகார் கூறியதால் மாணவி விபரீத முடிவு

சென்னையில் பள்ளி மாணவி 16வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கொளத்தூரைச் சேர்ந்த வைஜெயந்தி என்ற மாணவி சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி சரியாக படிப்பதில்லை, வீட்டுப்பாடம் எழுதுவதில்லை என மாணவியின் பெற்றோரிடம் ஆசிரியர் ஒருவர் புகார் கூறியதாகவும், வீட்டிற்கு போனால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் மாணவி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டிற்கு செல்லும் வழியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 16வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments