மழை பெய்தாலும் வீட்டை விட்டு வந்து எனக்கு வாக்களியுங்கள் - மம்தா பானர்ஜி

0 1837
மழை பெய்தாலும் வீட்டை விட்டு வந்து எனக்கு வாக்களியுங்கள் - மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநில முதலமைச்சராக, தாம் தொடர வேண்டும் என்று விரும்பினால், மழை பெய்து கொண்டிருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பல்வேறு சமூக மக்கள் வசிப்பதால் பவானிபூரை மினி இந்தியா என்று வர்ணித்தார்.

தாம் 6 முறை இதே தொகுதியில் வெற்றி பெற்று இருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். வருகிற 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், மம்தாவின் வெற்றியை தடுக்க பாஜகவும் தீவிர களப்பணியாற்றி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments