தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2172
தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 226 பேரும், சென்னையில் 222 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 116 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 107 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 89 பேரும், சேலம் மாவட்டத்தில் 88 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 82 பேரும், திருச்சி மாவட்டத்தில் 81 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,624 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 27 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 17,121 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments