பங்காருஅடிகளார் மனைவியிடம் ரூ.250 கோடி சொத்துக்களா ? வேட்புமனு தாக்கலில் கோட்டை விட்டார்..!

0 22258
பங்காருஅடிகளார் மனைவியிடம் ரூ.250 கோடி சொத்துக்களா ? வேட்புமனு தாக்கலில் கோட்டை விட்டார்..!

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள பங்காரு அடிகளாரின் மனைவி, தனக்கு மொத்தமாக 253 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.....

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் பங்காரு அடிகளார்.! இவரது மனைவி லெட்சுமி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்த நிலையில் தற்போது மீண்டும் போட்டியிடும் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சுயேட்சையாக போட்டியிடும் லட்சுமி தனது வேட்பு மனுவில் தனது பெயரில் 7 கோடியே 51 லட்சத்து 49 ஆயிரத்து 141 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், 16 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரத்து 3 ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள லட்சுமி மொத்தமாக 253 கோடியே 54 லட்சத்து 29 ஆயிரத்து 144 ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டு கூட்டலில் கோட்டை விட்டுள்ளார்.

அதாவது அசையும் , அசையா சொத்துக்களின் மதிப்பை கூட்டினால் 23 கோடியே 54 லட்சத்து 29 ஆயிரத்து 144 ரூபாய் மட்டுமே வரும் நிலையில் தன்னிடம் மொத்தமாக 253 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக மதிப்பை தவறாக குறிப்பிட்டுள்ளார் லட்சுமி. மேலும் தனது கணவர் பங்காரு அடிகளார் மற்றும் தனது பெயரில் கூட்டாக மொத்தம் 9 கோடியே 78 லட்சத்து 48 ஆயிரத்து 70 ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் லட்சுமியின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ள பங்காரு அடிகளாரின் மகன் கோ.ப.செந்தில் குமார், தன்னிடம் 27 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 742 ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் ஏதுமில்லையென்றும், 4கோடியே 33 லட்சத்து 22 ஆயிரத்து 193 ரூபாய்க்கு சுய சம்பாத்தியத்தில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அந்த சொத்தின் மேம்பாடு மற்றும் கட்டுமானத்திற்கு 17 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், தற்போது தன்னிடம் 26 கோடியே 40 லட்சத்து 36 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ள செந்தில் குமார் தன்னிடம் பரம்பரை சொத்துக்கள் ஏதுவுமில்லை என்று கூறியுள்ளார்.

மேல்மருவத்தூர் ஊராட்சியில் போட்டியிட இவர்கள் இருவரை தவிர வேறு எவரும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், வேட்புமனு ஏற்கப்பட்டால் பங்காரு அடிகளாரின் மனைவி லெட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments