பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து குழந்தை கொலை..! தாய் கிழவி கைது..!

0 4952
பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து குழந்தை கொலை..! தாய் கிழவி கைது..!

கோயம்புத்தூரில் தொட்டிலில் தூங்கிய குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பிஸ்கட் பேப்பரை வாயில் திணித்து கொலை செய்ததாக குழந்தையின் பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரது மகள் நந்தினி, வட மாநில இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து, தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

குழந்தையை தனது தாயிடம் கொடுத்துவிட்டு பணிப்பெண் வேலைக்கு சென்று வந்த நந்தினி, புதன்கிழமையும் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். குழந்தையை வீட்டில் இருந்து தாய் நாகலட்சுமி கவனித்து வந்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிய நந்தினி, தொட்டிலில் பேச்சு, மூச்சின்றி கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியைடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.எஸ்.புரம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் கையில் நகக் கீறல்களும், முதுகு, நெற்றி, கால் ஆகிய இடங்களில் பலத்த அடிபட்டதற்கான காயங்களும் இருந்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

சம்பவத்தன்று குழந்தையுடன் இருந்து நந்தினியின் தாய் நாகலட்சுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. வடமாநில இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நந்தினிக்கு, நினைத்தபடி வாழ்க்கை அமையாததால் அவரது தாய் நாகலட்சுமி மன விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆத்திரத்தில், நந்தினி வேலைக்கு செல்லும் நேரத்தில், சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஆத்திரப்பட்டு குழந்தையை கொடூரமாக தாக்குவதை நாகலட்சுமி வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.சம்பவத்தன்று அதேபோன்று இயற்கை உபாதை கழிக்கும்போது, துர்கேஷ் சுட்டித் தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த பாட்டி, குழந்தை துர்கேஷை தாக்கியதாகவும், வீட்டில் கிடந்த பிஸ்கட் கவரை குழந்தையின் வாயில் திணித்து தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டதாக நாகலட்சுமி வாக்குமூலம் அளித்த நிலையில், அந்த பிஸ்கட் கவர் தொண்டைக் குழியில் சிக்கி குழந்தை துர்கேஷ் மூச்சுத் திணறி உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, கொலை வழக்குப்பதிந்து விபரீத கிளவி நாகலட்சுமியை கைது செய்தனர். காதல் கணவன் மகளை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் அவனுக்கு பிறந்த குழந்தை என்ற ஆத்திரத்தில் அத்தகுழந்தையை துன்புறுத்தி கொலை செய்த கொடூர பாட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments