இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் ; ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலைக்கு ரூ.7523 கோடி மதிப்பில் ஆணை

0 1747
ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலைக்கு ரூ.7523 கோடி மதிப்பில் ஆணை

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலையில் 118 பீரங்கிகளைத் தயாரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. சென்னை ஆவடியில் உள்ள திண்ணூர்தித் தொழிற்சாலையில் அர்ஜுன் எம்கே 1ஏ வகைப் பீரங்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஏழாயிரத்து 523 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய ராணுவத்துக்குத் தேவையான 118 பீரங்கிகளை இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கக் கொள்முதல் ஆணை வழங்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பரத்பூசண் பாபு தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments