கிடங்கில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து- 2 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

0 1457

பெங்களூரில் கிடங்கில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த இருவர் உயிரிழந்தனர்.5 பேர் தீக்காயமடைந்தனர்.

பெங்களூர் தரகுப்பேட்டையில் தனியார் லாரி சர்வீஸ் வளாகத்தில் உள்ள கிடங்கில் பட்டாசுகள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இன்று நண்பகலில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த விபத்தில் அங்குப் பணிபுரிந்த அஸ்லம் பாஷா, மனோகர் ஆகிய இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் தீக்காயமடைந்தனர்.

இந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments