பள்ளி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

0 2492
பள்ளி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

புதுக்கோட்டையில் பள்ளி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்ததாக கைதான ஆசிரியர் சண்முகநாதனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எப்.எஸ் என்கிற புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான சண்முகநாதன், அங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் பாலியல் வக்கிரத்துடன் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து, காவல்துறை அவனை கைது செய்தது.

சண்முகநாதனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு பின் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து, சண்முகநாதன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments